Home கனடா கனடாவில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற இந்தியருக்கு ஜாமீன்

கனடாவில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற இந்தியருக்கு ஜாமீன்

by Jey

கனடாவில், தன் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்று, அவரது உடலை தீவைத்து எரித்த இந்தியர் ஒருவருக்கு முழுமையான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் வாழ்ந்துவந்த பள்ளி ஆசிரியரான முக்தியார் சிங் பங்காலியின் மனைவியான மன்ஜீத் பங்காலி, 2006ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி காணாமல்போனார்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, மன்ஜீத்தில் உடல், மோசமாக எரிந்த நிலையில் கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. தன் மனைவியைக் காணவில்லை என நாடகமாடிய பங்காலி, 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

2011ஆம் ஆண்டு, 15 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத வகையில் பங்காலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தற்போது பங்காலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதால் சமுதாயத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர் மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ அது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், பங்காலிக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் அவர் தன் மனைவி குடும்பத்தினரை, தன் சொந்த மகள் உட்பட, சந்திக்கக் கூடாது என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

related posts