அரசியலமைப்பின் அடிப்படையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும், அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடத்தப்படும். அதேவேளை மாகாண சபைத் தேர்தல் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வாக்களிக்கும் மக்களில் 50 சதவீதத்தினர் அனைத்து அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றனர். அவர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை விரும்புகிறார்கள்.