வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், ‘மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை,நாட்டின் வளர்ச்சிக்காக தம் உயிரையும் பணையம் வைத்து நம்மை பாதுகாக்கும் கடமை உணர்வுமிக்க போலீஸ்துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீரவணக்க நாளில் எனது எனது வீரவணக்கங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆவடியில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று காலை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.