பாரதீய ஜனதாக்கட்சியில் இருந்து நடிகை கௌதமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அவர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில், தனிப்பட்ட நெருக்கடியின் போது கட்சித் தலைமையிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாதது குறித்து தனது ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் கடுமையான இதயத்துடனும் ஏமாற்றத்துடனும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை ஒருவர் மோசடி செய்துள்ளதாகவும், எனினும் கட்சியின் சிலர் அவருக்கு தீவிரமாக ஆதரவளிப்பதாகவும் கௌதமி சுட்டிக்காட்டியுள்ளார்.