நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை.
ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்துளார்.
பின்னர் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து இறுதியாக 10.10.2023 இல் தனது விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.
தந்தை தான் ஒரு விமானியாக வரவேண்டும் என்ற ஆவாவினால் பல முயற்சிகளை மேற்கொண்டு விமானியாக வராவிட்டாலும் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து முதல் தமிழ் பேசும் ஒருவராக 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிகின்றார்.
தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஸ்ரங்கள், சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.
இந்நிலையில் புலம்பெயர் தேசத்தில் சாதனை படைத்த யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளைக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களைட்யும் கூறி வருகின்றனர்.