அதிபர் புதினுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதின் தனது அறையில் இருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர் என்றும், அப்போது புதின் தரையில் விழுந்து கிடந்தார் என்றும், அங்கிருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதினுக்கு சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளை கொண்ட அறைக்கு புதினை டாக்டர்கள் கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் புதின் சுய நினைவுக்கு திரும்பினார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே, அதிபர் புதின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது.
அதிபர் புதின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் உடல்நலக் குறைவால் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரை போல தோற்றமளிக்கும் ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
அதேவேளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.