ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு மாகாணமான வடக்கு கினுவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் நாசக்கார செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அங்குள்ள வளம்மிக்க வைர சுரங்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கம் நடத்துகிறார்கள்.
இந்தநிலையில் அங்குள்ள ஒய்சா என்னும் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் திடீரென அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கண்ணில் படும் நபர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பியோடினர்.
இந்த தாக்குதலில் 26 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பலரின் நிலைமை படுமோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.