டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொரன்டோ நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தீ விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லித்தியம் அயன் பேட்டரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ தீயணைப்பு சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக் போன்ற பல்வேறு சாதனங்களில் இவ்வாறு தீ பற்றிக்கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பேட்டரிகள் வெடித்து சிதறுவதனால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் சொத்துக்களுக்கு செய்த மேற்படலாம் எனவும் சில வேலைகளில் உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.