Home இலங்கை மக்களை வீதிகளில் இறக்கிவிட்டு தாங்கள் சுக போகங்களை அனுபவிப்பவர்கள்….??

மக்களை வீதிகளில் இறக்கிவிட்டு தாங்கள் சுக போகங்களை அனுபவிப்பவர்கள்….??

by Jey

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு – கிழக்கில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் கடையடைப்புக்கு செல்லாமல் 2500 ரூபாவுக்காக நாடாளுமன்றம் வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் போராட்டங்களை வரவேற்கிறேன். போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அன்றையதினம் 2500 ரூபா கொடுப்பனவுக்காக நாடாளுமன்றம் வந்ததை அவதானித்தேன்.

நான் அவர்களில் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. யார் என அறிய வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியும்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் மக்களின் நாளாந்த வருமானத்தை இழக்க வைக்க கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு தாங்கள் நாடாளுமன்றத்தில் சலுகைகளை அனுபவிக்க வந்தார்கள்.

நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆணை பெற்றவர்கள் போராட்டம் என்ற போர்வையில் தொழில்களை நிறுத்தி மக்களை வீதிகளில் இறக்கிவிட்டு தாங்கள் சுக போகங்களை அனுபவிப்பவர்கள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது” என்றார்.

 

 

 

related posts