Home உலகம் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் பலி

by Jey

இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடியிலான போர் 20 நாட்களை கடந்துள்ளது. இதனால் காசாவில் உள்ள மக்கள் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருதரப்பிலும் 7000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும், ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பட்டாலியன், ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

related posts