இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கனடியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழந்த கனடியர்களின் எண்ணிக்கை தற்பொழுது ஏழாக அதிகரித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த போரின் போது காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை இரண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.