பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் – கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள சிட்டியோ ஏஞ்சலோவில் தொடர் மழை பெய்ந்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள சுரங்கங்கள் திடீரென இடிந்து விழுந்து பெரும் சேதத்தை சந்தித்தன.
மேலும் நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன.