Home உலகம் எகிப்து நாட்டில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து

எகிப்து நாட்டில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து

by Jey

எகிப்து நாட்டில் அடுத்தடுத்து கார்கள் மோதி கொண்டு விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் மத்திய தரைக்கடல் நகரான அலெக்சாண்டிரியாவை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில், இன்றைய தினம் (28-10-2023) திடீரென கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் பயணிகள் பஸ் ஒன்று மற்றும் பிற வாகனங்களும் விபத்துக்குள்ளானது.

இதேவேளை, சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது, இந்த சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தாகவும், 63 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து, ஆம்புலன்சுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

related posts