Home கனடா கனடாவின் பொருளாதாரத்துக்கு தற்காலிக புலம்பெயர்தல் எவ்வளவு முக்கியம்..?

கனடாவின் பொருளாதாரத்துக்கு தற்காலிக புலம்பெயர்தல் எவ்வளவு முக்கியம்..?

by Jey

பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு புலம்பெயர்தல் அவசியம் என்பது தற்போதைய காலகட்டங்களைப் பொருத்தவரை, பெரும்பாலானோர் அறிந்துகொண்டுள்ள விடயம்.

கனடாவுக்கும் அதே நிலைதான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

ஆனால், புலம்பெயர்தல் என்றாலே, பலரும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறித்துத்தான் எண்ணுகிறார்கள். ஆனால், தற்காலிக புலம்பெயர்தல் என்றும் ஒரு விடயம் உள்ளது.

அத்துடன், கனடாவின் பொருளாதாரத்துக்கும், இந்த தற்காலிக புலம்பெயர்தல் எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோர் என்பவர்கள், வெளிநாட்டுப் பணியாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரைக் கொண்ட புலம்பெயர்ந்தோரின் ஒரு பிரிவினர் ஆவர்.

குறிப்பாக, இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் 70 சதவிகிதத்துக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

ஆனால், இந்த தற்காலிக புலம்பெயர்ந்தோர், குறைத்தே எடை போடப்படுகிறார்கள்!

related posts