Home உலகம் காசாவில் புதைகுழிகளை தோண்ட வேண்டிய நிலை….

காசாவில் புதைகுழிகளை தோண்ட வேண்டிய நிலை….

by Jey

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் , தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகளையும் பறிப்பதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

புதியவர்களை புதைப்பதற்காக ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலையில் குடும்பங்கள் காணப்படுகின்றன.

மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள் உடல்களை புதைத்த பின்னரே உறவினர்களிற்கு தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இஸ்ரேலின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் எவராவது கொல்லப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் கரங்களில் பிரஸ்லட் அணிவிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக காசாவில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை மனதை கலகடிக்கின்றது.

குழந்தைகள் சிறுவர்களின் கைகால்களில் மார்க்கர்களால் அவர்களின் பெயர்களை எழுதுகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலக அரங்கில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

8000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 3300 பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றது.

மேலும் 1650 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் எனவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

related posts