தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டும் இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.