Home இலங்கை ‘நாம் 200’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய நிதி அமைச்சர்

‘நாம் 200’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய நிதி அமைச்சர்

by Jey

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இலங்கைக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு வரும் அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் முக்கிய இடங்களையும் பார்வையிடவுள்ளார்.

அத்துடன், அமைச்சர் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாளை 2ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு சுகந்ததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

இதேவேளை, நாளையதினம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் “இணைப்பை மேம்படுத்துதல் : செழுமைக்கான கூட்டு” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய – இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் முக்கிய உரையாற்றவுள்ளார்.

related posts