ஒன்றாரியோ மாகாணத்தில் சிறு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தபால் மூலம் அனுப்பி வைத்த காசோலை களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
10,000 டாலர் பெறுமதியான காசோலை இவ்வாறு களவாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்ட காசோலையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
களவாடப்பட்ட காசோலை வேறும் ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.