Home கனடா கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி

by Jey

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகச் செயலாளராக பணியாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொட்டாஞ்சேனை பொலிஸார், சாட்சியங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலன்னறுவையைச் சேர்ந்த ரசிக பண்டார என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

related posts