வங்காள தேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற அறுபது தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்காள தேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை சோதனை இட்டபோது அதில் கடத்த முயன்ற 60 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த எடை 6.998 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.4.32 கோடி ஆகும்.
அந்த வாகனத்தின் ஓட்டுநர், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜாய்ப்பூர் கிராம பகுதியை சேர்ந்த சுராஜ் மேக் (வயது 23) என அடையாளம் காணப்பட்டார்.