1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
மேல்நாட்டு மருமகளை தொடர்ந்து கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, ஜெயம், வின்னர், சாட்டை, கும்கி என பல படங்களில் நடித்தார்.
ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
அதிலும் கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியில் ஜூனியர் பாலையா சொல்லும், ‘அண்ணே என்னதான் இருந்தாலும் அவன் நம்ம செட்டு’ என்ற வசனம் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில், அவரின் இழப்பு சினிமாவுக்கு பேரிழப்பு. பலரும் ஜூனியர் பாலையாவுக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.