கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் தாக்க உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மூணாறு எம்.சி.காலணியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக வெளவால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்கிய நிலையில், 2 பேர் உயிரிழந்தனர்.
வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.