கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும்.
எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.