Home இலங்கை தேர்தல் சீர்திருத்தங்களுக்கான புதிய உறுப்பினர் நியமனம் – ஜனாதிபதி

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான புதிய உறுப்பினர் நியமனம் – ஜனாதிபதி

by Jey

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உறுப்பினர் ஒருவரை நியமித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 02 ஆம் திகதி) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலன் கார்மைக்கேல் வெரே டேவிட், ஆணைக்குழுவின் 10ஆவது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் நிறைவேற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

related posts