யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய நிதி நிர்மலா சீதாராமன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று காலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.
பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திய நிதி அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்திய நிதி அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட இந்திய உயர்மட்ட குழுவும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றுமுன்தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்ததுடன், அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற நாம் 200 நிகழ்வில் அவர் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவர் யாழ்ப்பாணம் வந்ததுடன். இங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.