Home உலகம் அமெரிக்காவை தாக்க கூடிய திறன் வடகொரியாவுக்கு உள்ளது

அமெரிக்காவை தாக்க கூடிய திறன் வடகொரியாவுக்கு உள்ளது

by Jey

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீட்டித்து வரும் நிலையில் ஒரு நாள்… ரஷியாவை போன்று அமெரிக்காவும் உடையும் என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதலை மேற்கொண்ட நிலையில் , இருதரப்பும் இடையில் போர் மூண்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா, லெபனான் நாட்டு யூ-டியூப் சேனலுக்கு அளிக்கையில், அமெரிக்காவானது, பிரிட்டனால் தோற்றுவிக்கப்பட்டது.

ரஷியாவை போன்று அமெரிக்காவும் ஒரு நாள் உடையும் என கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும் இந்த பகுதியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நெருங்கி வருகின்றனர்.

எப்போது, போரில் அமெரிக்கா இணைகிறதோ, அதன்பின் அமெரிக்கா கடந்த கால விசயங்களில் ஒன்றாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது அமெரிக்கா, சக்தி படைத்த நாடாக தொடர்ந்து இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து, அமெரிக்காவை தாக்க கூடிய திறன் வடகொரியாவுக்கு உள்ளது என கூறியதுடன், அவர்களும் எங்களுடைய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

related posts