Home உலகம் அவசர மருத்துவ உதவி வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

அவசர மருத்துவ உதவி வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

by Jey

காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனை அருகே அவசர மருத்துவ உதவி வாகனங்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதிர்ச்சியளித்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

காஸாவிலிருந்து காயமடைந்தோரை ராஃபா எல்லை நோக்கி அழைத்துச்சென்றபோது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.

எனினும் குறித்த வாகனங்கள் ஹமாஸ் பயன்படுத்தும் வாகனங்கள் என அடையாளம் காணப்பட்டதால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

சென்ற மாதம் (அக்டோபர் 2023) 7ஆம் திதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1400க்கும் அதிகமானோர் மாண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலியத் தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 9,000த்தைத் தாண்டிவிட்டது என ஹமாஸ் வழிநடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 

related posts