Home விளையாட்டு பயிற்சியில் ஈடுபட முடியாது தவிக்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

பயிற்சியில் ஈடுபட முடியாது தவிக்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

by Jey

டெல்லி முழுவதும் கடுமையாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

டெல்லி நகரம் முழுவதும் கடுமையாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

புதுடெல்லியில் கடுமையாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளமையால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தங்கள் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணி பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டிருந்த போதிலும், கடுமையான காற்று மாசுபாடு காரணமாக பயிற்சியில் ஈடுபடுவதை கைவிட்டது.

இன்று சனிக்கிழமை இலங்கை அணி டெல்லியில் பயிற்சியில் ஈடுபட இருந்தது. ஆனால், அணியின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி நகரம் முழுவதும் கடுமையாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நாளை மறுதினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் டெல்லி மைதானத்தில்தான் மோத உள்ளன.

என்றாலும், இரு அணிகளும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.

காற்றின் தரக் குறியீடு AQI 400க்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்திய அரசாங்க நிறுவனத்தின் காற்று தர கண்காணிப்பு எச்சரிக்கை அமைப்பு, சனிக்கிழமையன்று AQI கடுமையான பிரிவில் இருக்கும் என்றும் நவம்பர் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அப்படியே நிலைமை தொடரும் என்றும் கூறியுள்ளது.

மோசமான நிலைமைகள் காரணமாக, நாங்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என பங்களாதேஷ் அணியின் இயக்குனர் காலித் மஹ்மூத் கூறியுள்ளார்.

“எங்களுக்கு இன்னும் இரண்டு பயிற்சி நாட்கள் உள்ளன. காற்று மாசு காரணமாக சிலருக்கு இருமல் ஏற்பட்டது. அது ஆபத்தான காரணியாக உள்ளது. நாங்கள் நோய்வாய்ப்பட விரும்பவில்லை.‘‘ என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மைதானத்தில் ஒரு டெஸ்டில் இலங்கை அணி விளையாடிய போது, அணியில் தற்போதுள்ள பல வீரர்கள் மாசுபட்ட டெல்லி காற்றில் கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளனர்.

related posts