காஸா பிராந்தியத்தில் தங்கியுள்ள கனடியர்கள் நாளைய தினம் நாடு திரும்பக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காஸாவில் தங்கியுள்ள கனடியர்கள் தொடர்ந்தும் காத்திருக்க நேரிட்டுள்ளது.
போர் பதற்றம் நிலவி வரும் காஸா பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதற்கு பல கனடியர்கள் ஆயத்தமாகி காத்திருக்கின்றனர்.
எனினும், ராஃபா வாயில் ஊடக எகிப்து நோக்கி செல்வதற்கு இன்னமும் கனடியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.