புதுடெல்லியின் அபாயகரமான காற்று மாசுபாட்டால் பள்ளிகள், கடந்த 7 ஆண்டுகளில் முதன்முதலில் மூடப்பட்டுள்ளன.
இதன்படி ஆரம்பப்பள்ளிகள் நவம்பர் 3 முதல் 10 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
உயர்தரப் பள்ளிகள் விருப்ப அடிப்படையில்; செயற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதற்கு அப்பால் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் ஆபத்தான மாசுபாட்டின் காரணமாக காலையில் பள்ளிக்கு செல்வதை கருத்திற்கொண்டே அவை மூடப்பட்டுள்ளன.
முன்னதாக 2016 ஆம் ஆண்டு டெல்லியில் முதல் முறையாக பள்ளிகள் மூடப்பட்டன.
அதன்போது மாசு 600 மைக்ரோகிராம் கன மீட்டராக இருந்தது.
இது 40 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்று கூறப்பட்டிருந்தது
அதன்பிறகு பலமுறை அபாயகரமான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.
எனினும் இந்த ஆண்டு 800 மைக்ரோகிராம்ஃகியூபிக் மீட்டருக்கு மேல் டெல்லியின் கிழக்கு எல்லையான காசியாபாத்தில் காற்று மாசுப்பட்டுள்ளது.
இது உலக சுகாதார மையத்தின் பாதுகாப்பான வரம்பை விட 33 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.