தமிழக மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், தமிழக மீனவர்களின் கைது செய்யும் விதத்திலும் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆறு கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ராமேஸ்வர மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.