காசாவில் மனிதாபிமான போர் இடைநிறுத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டு தங்கியுள்ளார்.
கடந்த வாரம் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கும் விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.
தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளார்.