இந்திய இலுவைப் படகுகளை ஒருவிநாடிக்கூட இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்ககூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேராவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” இந்திய இலுவை படகு தொடர்பில் உங்களின் கருத்துடன் உடன்படுகின்றேன். இழுவை படகுக்கு ஒரு விநாடிகூட அனுமதிக்ககூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
இதனை வெளிப்படையாக பல இடங்களில் நான் தெரிவித்து வருகின்றேன்.
இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு குறித்து ஏட்டிக்குப்போட்டியான அறிவிப்புகள் வெளிவருவது வழமை.
1974 கைச்சாத்திடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தால் 80 வீதமான வளங்கொழித்த கடல் பரப்பை நாம் இந்தியாவுக்கு தாரை வார்த்துவிட்டோம்” என தெரிவித்தார்.