Home கனடா காசாவில் தங்க விரும்புவதாக தெரிவித்த கனடியர்

காசாவில் தங்க விரும்புவதாக தெரிவித்த கனடியர்

by Jey

பாரிய போர் நடந்து கொண்டிருக்கும் காசாவில் தங்கி இருந்து வேலை செய்ய விரும்புவதாக கனடியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காசாவில் இடம் பெற்று கொண்டிருக்கும் யுத்தத்தை ஒழிப்பதிவு செய்வதற்காக தான் காசாவில் தங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது காசா யுத்தத்தை ஒலிப்பதிவு செய்ய வேண்டியது தனது கடமை எனவும் கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார். எனினும் தனது குடும்பத்தை அங்கிருந்து அவர் அகற்றியுள்ளார்.

தனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts