Home இலங்கை பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை தனித்துவமானது இல்லை

பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை தனித்துவமானது இல்லை

by Jey

இலங்கையில் 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ், ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட தமிழர்கள் கொல்லப்பட்டமை சேர்க்கப்படவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாகவது,

பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை தனித்துவமானது இல்லை என்பதை தற்போது அதிகளவிற்கு நான் உணர்கின்றேன். எந்த வகையிலும் நாங்கள் விசேடமானவர்கள் இல்லை.

நாங்கள் சுதந்திரத்தை தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
இலங்கையில் கடந்த 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் .

இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கவில்லை ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட அது சேர்க்கப்படவில்லை. சீற்றம் மட்டும்போதாது என்பதை வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது.

related posts