Home இந்தியா 38 இந்திய மீனவர்கள் விடுதலை

38 இந்திய மீனவர்கள் விடுதலை

by Jey

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 38 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த மாதம் 16 மற்றும் 29ஆம் திகதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று குறித்த மீனவர்கள் 38 பேரும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டன.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த மீனவர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும், இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

 

 

related posts