தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் கனடிய மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கனடவில் மில்லியன் கணக்கான மக்களும் உலகமெங்கிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இன்பமான தினத்தில் குடும்பங்களும் நண்பர்களும் பரிசுகளை பரிமாறிக் கொள்வர் எனவும் உணவுப் பொருட்களை பரிமாறிக்கொள்வர் எனவும் தெரிவித்துள்ளார்.
இருளை அகற்றி ஒளியை பரப்புவதனை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் ஆலயங்களை அலங்கரித்து தீபம் ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தன்னலமற்றதன்மை, நன்றி, குறைந்த வசதியுடையவர்களுக்கு இரக்கம் காட்டுதல் மற்றும் நம்பிக்கை போன்ற பெறுமதிகளை தீபாவளி பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை தினத்தில் இந்துக்களினால் கனடாவிற்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு பங்களிப்புக்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.