Home இந்தியா இந்தியாவில் 20 மடங்கு அதிகரித்த காற்று மாசுபாடு

இந்தியாவில் 20 மடங்கு அதிகரித்த காற்று மாசுபாடு

by Jey

இந்தியாவின் டெல்லி, நொய்டா மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி நேற்று (12) தீபாவளியை முன்னிட்டு இரவில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியதையடுத்து இன்று காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக , இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

டெல்லியின் பாதைகளில் தூசி துகள்களுடன் அடர்ந்த புகையுடன் மழை பெய்து வருவதாகவும், குறித்த பாதைகளில் பயணிக்கும்போது சில மீட்டர்கள் முன்னால் பார்க்க முடியாது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்பை விட 20 மடங்கு அதிகரித்துள்ளது.

related posts