இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிக்க வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.