Home Uncategorized நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

by Jey

”ராஜபக்ச சகோதரர்கள் வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட் டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்கும் அளவுக்கு ராஜபக்ச சகோதரர்களுக்கு நாட்டிற்கு வெளியே போதுமானளவு பணம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களிடமிருந்து அதற்கான மீட்பு பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

நாட்டிற்கு வெளியே வைத்துள்ள அனைத்து பணத்தையும் மீண்டும் கொண்டு வர முடியும். அந்த பணத்தில் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுப் பணம் திருடப்பட்டதாலேயே நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரிக்கு கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது.” என்றார்.

 

 

related posts