பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் பாகிஸ்தானில் இன்று (15.11.2023) காலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் பாகிஸ்தான் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததென தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நேற்று இலங்கையின் தென்கிழக்கே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.