Home இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து …….??

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து …….??

by Jey

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மற்றும் கடன்கள் பற்றிய தன்னார்வ அறிவிப்பின் படி இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கின்றன என்ற தகவல்கள் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் பொது வாழ்வில் தங்களுடைய பொறுப்புக்களை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தாங்களாகவே சொத்துக்கள், கடன்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்களை முன்வந்து அறிவிப்பார்கள்.

குறித்த முறையை அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது.இந்நிலையில் 73 வயதான பிரதமர் நரேந்திர மோடியின் வங்கி கணக்கின் இருப்பு வெறும் 574 ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே காப்புறுதி திட்டத்தை வைத்திருந்த நிலையில், அந்த பணத்தை ஒரு நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அவர் முதலீடு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் காந்திநகர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் அவருக்கு நிலையான வைப்பாக 2.47 கோடி ரூபாய் உள்ளது. அத்துடன் தேசிய சேமிப்புச் சான்றிதழ் வாயிலாக 9.19 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளதோடு மோடியிடம் கடன்களோ, வாகனங்களோ, நிலச் சொத்துகளோ இல்லை.

பிரதமர் மோடி எந்த சம்பளமும் வாங்காமல், தான் பெறும் முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குகிறார். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை அவரிடம் மொத்த பணமாக 30,240 ரூபாய் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts