Home விளையாட்டு விராட் கோலியின் சாதனை

விராட் கோலியின் சாதனை

by Jey

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காரின் சாதனை முறியடித்தே இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த சச்சின் டெண்டுல்கார் 49 சதங்களை பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 50ஆவது சதத்தை அடித்ததன் மூலம் விராட் கோலி 290ஆவது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் ஒரு சீசனில் அதிக ஓட்டங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் 673 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதனை கோலி முறியடித்துள்ளார்.

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 709 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும்.

இன்றைய போட்டியில் அவர் 117 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி. அந்த பட்டியலில் விராட் கோலி 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

 

 

 

related posts