காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கை 370 வீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கையான ‘தி லான்செட்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகளவில் வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், காலநிலை மாற்றம் குறித்தும் குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால், உலக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
தொழில்துறை உற்பத்தியை குறைக்க வேண்டும். வினாடிக்கு 1,337 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்.
கடந்த 1991-2000ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2013-2022ம் ஆண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளால் 85 வீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.