உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்கும் என முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தனது 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் எமது கட்சியே வெற்றிபெறும். தேர்தல்கலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் நிலையிலேயே உள்ளது. உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளரை களமிறக்குவோம்.” என தெரிவித்தார்.