Home இலங்கை இன்று ஆரம்பமானது நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம்

இன்று ஆரம்பமானது நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம்

by Jey

உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் அரசினால் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.

அதன்படி, தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இந்நிலையில், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கெ.சங்கீதன் தலைமையில் ஆரம்பமானது.

புதுமுறிப்பு நன்னீர மீன் உற்பத்தி பண்ணையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வான இன்று இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகள் ஐந்து தொட்டிகளில் விடப்பட்டுள்ளதுடன், ஏனைய 25 தொட்டிகளிலிட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

related posts