தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்தும் வலியுறுத்தினார்.
தெற்காசிய பிராந்தியத்தில் புதிய பொருளாதார மாற்றத்திற்கான தனது நோக்கை முன்வைத்த ஜனாதிபதி, பிராந்திய நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய மாதிரியையும் முன்மொழிந்தார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவிற்கும் தமக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.