கனடா மற்றும் அமெரிக்காவில், கிர்ணி பழங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பழங்களை உண்ணவேண்டாம் என உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கிர்ணி பழத்தை உண்ட 43 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.