Home விளையாட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

by Jey

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் நாளை மறுதினம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்யுமாறு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியதாக கூறப்படும் மூன்று கடிதங்களை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (20) சமர்பித்திருந்தார்.

குறித்த மூன்று கடிதங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவை எனவும் அவர் சபையில் கூறுகின்றார்.

 

 

 

 

related posts