Home உலகம் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான புதிய தடை- அவுஸ்திரேலிய அரசாங்கம்

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான புதிய தடை- அவுஸ்திரேலிய அரசாங்கம்

by Jey

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான புதிய தடைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பயங்கர எதிர்ப்பு நிதி தடைகளை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஹமாசுடன் தொடர்புபட்ட எட்டு நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாகஅவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் செயற்பாட்டாளர்கள் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களிற்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடைகள் தடைவிதிக்கப்பட்ட நபர்கள் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என பெனி வொங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2001 இல் முதல்தடவை ஹமாசிற்கு எதிராக தடைகளை விதித்திருந்தது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய தடைகளை அவுஸ்திரேலியாவின் சியோனிஸ்ட் சம்மேளனம் வரவேற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு ஹமாஸ் இஸ்ரேலிய மக்களை பயமுறுத்துகின்றது காசா மக்கள் மீது இடைக்காலத்தின் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை சுமத்துகின்றது எனவும் சியோனிச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

related posts